logo

E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1949/2026: மாபோலை, பாத்திமா வீதி விளையாட்டு மைதானம்: வத்தளை மாபோலை நகர சபைக்குக் கையகப்படுத்தப்படல்

கௌரவ  ஸ்டெபனி பிரனாந்து,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)   (i)      வத்தளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாபோலை, பாத்திமா வீதி விளையாட்டு மைதானம், வத்தளை மாபோலை நகர சபைக்கு கையகப்படுத்தப்பட்ட விதம் யாதென்பதையும்;

(ii) மேற்படி காணி வத்தளை மாபோலை நகர சபையின் முன்னாள் தவிசாளருக்குச் சொந்தமானது என்பதை அறிவாரா என்பதையும்;

(iii) நகர சபையின் தவிசாளராக அவர் கடமையாற்றி வரும் போது, தனக்குச் சொந்தமான ஒரு காணியை நகர சபைக்கு விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சதுப்பு நிலமொன்றாகவிருந்த மேற்படி காணி, போலி உறுதியொன்று  தயாரிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி காணியைக் கொள்வனவுசெய்வதற்கு நகர சபை செலவிட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்படி கொள்வனவு, சட்டமுறையானதா என்பதையும்;

(iv) இன்றேல், மேற்படி கொள்வனவோடு தொடர்புபட்ட அலுவலர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ ஸ்டெபனி பிரனாந்து, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-05-19

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks