E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1925/2026: விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பாடசாலை மாணவர்கள்: மேல் மாகாணம்

கௌரவ தேவானந்த சுரவீர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மேல் மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகளில் 5 – 16 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்விப் பணிப்புரையை அமுல்படுத்துவதற்கான பாடசாலைக் குழுக்கள் தாபிக்கப்பட்டுள்ளனவா;
(ii) அவ்வப்போது, நீண்ட காலமாக மற்றும் முற்றாகப் பாடசாலை செல்லாத சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா;
(iii) ஆமெனில், மேற்படி சிறுவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அடைவு மட்டம்
குறைவான மற்றும் விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா;
(ii) மேற்படி சிறுவர்களை இனங்காண்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் யாவர்;
(iii) அடைவு மட்டம் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை யாது;
(iv) விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட சிறுவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை;
(v) பாடசாலைக் கல்வியை விட்டு விலகிச் செல்லும் சிறுவர்களை மீண்டும் பாடசாலைமயப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் நிகழ்ச்சித்திட்டமொன்று உள்ளதா;
(vi) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-05-19

பதில் அளித்தார்

கௌரவ நலின் ஹேவகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks