E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1886/2026: கல்முனை மாநகர சபை: வாகனங்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் பற்றாக்குறை

கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கல்முனை மாநகர சபை தற்போது செயல்பாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்பதையும்;
(ii) அத்தியாவசியமான இயந்திர உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்களின் பற்றாக்குறையானது மேற்படி பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதையும்;
(iii) மேற்படி குறைபாடுகள் காரணமாக திண்ம கழிவுப்பொருள் முகாமைத்துவம், வீதிப் பராமரிப்பு, வடிகாலமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுச் சுகாதார சேவைகள் அடங்கலான பொதுச் சேவைகள் சீர்குலைந்துள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மாநகர சபையின் இயந்திர உபகரணங்கள் மற்றும் கொள்திறன் தேவைகளை அடையாளம் காண்பதற்கு உத்தியோகபூர்வ மதிப்பீடொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி மதிப்பீடு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள தேவைப்பாடுகள் யாவை என்பதையும்;
(iii) தேவைப்படும் வளங்களின் வழங்கலுக்காக வகுத்தமைக்கப்பட்டுள்ள காலச்சட்டகம் யாதென்பதையும்;
(iv) முறைசார்ந்த மற்றும் நிரந்தரமான சேவையொன்றின் வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக மாநகர சபைக்குத் தேவைப்படும் வாகனங்களையும் இயந்திர உபகரணங்களையும் வழங்குவதற்கு துரித அல்லது நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-05-19

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks