பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1829/2026
கௌரவ லால் பிரேமநாத்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிராந்திய ஊடகவியலாளர்கள் தங்கள் செலவில் அறிக்கையிடும் செய்திகளுக்காக ஊடக நிறுவனங்களால் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவு குறித்து அறிவாரா;
(ii) அவ்வாறாயின், அக்கொடுப்பனவுகள் போதுமானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(iii) இவர்களுக்காக உறுதியான குறைந்தபட்ச கொடுப்பனவொன்றை அறிமுகஞ் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(iv) பிராந்திய ஊடகவியலாளர்களின் புலனாய்வுச் செய்திகள் ஊடக நிறுவனங்களால் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தணிக்கை செய்யப்படுவதை அல்லது திரிபுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்காக தற்போதுள்ள வேலைத்திட்டம் யாது;
(v) பிராந்திய ஊடகவியலாளர்களின் புலனாய்வுச் செய்திகளுக்காக, ஊடக நிறுவனங்கள் மாத்திரம் விருதுகளைத் தட்டிச்செல்வதை நிறுத்துவதற்கு இடையீடு செய்வாரா;
(vi) பிராந்திய ஊடகவியலாளர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் காணொளிகள் காரணமாக இவர்கள் குற்றம் சாட்டப்படுவதை அல்லது பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுப்பதற்காக எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது;
(vii) பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் சம்பந்தமாக ஆராய நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-07
கேட்டவர்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-07
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks