E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1826/2026: வன்னித் தேர்தல் மாவட்டத்திலுள்ள குளங்கள்: புனரமைத்தல்

1826/2026

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     வன்னி தேர்தல் தொகுதிக்குரிய ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும்,

           (i)     சிறிய மற்றும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் எண்ணிக்கை;

           (ii)    நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் குளங்களின் எண்ணிக்கை;

(iii) நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத குளங்களின் எண்ணிக்கை;

(iv) வயற் காணியின் அளவு;

ஆகிய விபரங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) (அ)(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள குளங்கள், நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி குளங்களை புனரமைத்து, அக்குளங்களுக்கு கீழே அமைந்துள்ள காணிகளை பயிர்ச்செய்கை நடவடிக்கைளுக்காக காணிகளற்ற குடும்பங்களுக்கு வழங்குவதற்கு சாத்தியம் உள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அதற்காக எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ அரவிந்த செனரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks