E   |   සි   |  

 திகதி: 2026-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1803/2026: தபால் திணைக்களத்துக்குச் சொந்தமான தபால் நிலையங்கள், காணிகள் மற்றும் கட்டிடங்கள்: மாத்தறை மாவட்டம்

1803/2025
கௌரவ லால் பிரேமநாத்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் வகைப்படுத்தலுக்கு அமைவாக வெவ்வேறாக யாவை;
(ii) மேற்படி மாவட்டத்தில் தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை யாது;
(iii) அவற்றின் பெயர்கள் மற்றும் அமைந்துள்ள இடங்கள் வெவ்வேறாக யாவை;
(iv) மேற்படி மாவட்டத்தில் தபால் நிலையங்களை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா;
(v) இன்றளவில் குறிப்பிட்ட சில தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை அறிவாரா;
(vi) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
(vii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை​;
(viii) மாவட்டத்தின் தபால் சேவையினை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(ix) அதற்காக எடுக்கும் காலப்பகுதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அகுரஸ்ஸ தபால் நிலைய அதிபரின் நிருவாக ரீதியான குறைபாடுகள் தொடர்பாக அறிக்கையிடப்பட்டுள்ளதா;
(ii) ஊழியர்கள் அவருக்கெதிராக எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அறிவாரா;
(iii) அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
(iv) இன்றேல், ஏன்;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-07

கேட்டவர்

கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks