E   |   සි   |  

 திகதி: 2026-04-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1673/2026: பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சுற்றுலா விடுதிகள் உள்ள காணிகள்: உறுதி வழங்கல்

1673/2025
கௌரவ எம்.எஸ். அப்துல் வாசித்,— கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்ன உல்லை, அறுகம்பே, சர்வோதயபுரம், ஜலால்தீன் சதுக்கம், குடாக்கள்ளி, விஸ்கி பொயிண்ட், கொட்டுக்கல் மற்றும் லைட் ஹவுஸ் போன்ற சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா விடுதிகளை நடத்துபவர்களின் காணிகளுக்கு அரசாங்கம் சரியான முறையில் நில அளவீடுகளை செய்து உறுதிகளை வழங்கவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) அத்தகைய ஆவணங்கள் இல்லாத சுற்றுலா விடுதிகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) அதன் காரணமாக, பொத்துவில் பிரதேச சபைக்கு ஏற்புடைய வியாபார வரிகளை அறவிட முடியாமல் உள்ளது என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) அவ்வாறெனில், பிரதேச செயலாளரின் அனுமதியின் கீழ் தனியார் நில அளவையாளர்கள் மூலம் நில அளவை செய்து 'உருமய' உறுதிகளை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியுமா என்பதையும்;
(v) அவ்வாறு நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் வரைபடத்தைப் பயன்படுத்தி அந்தக் காணிகளை 'உருமய' திட்டத்தில் சேர்க்க முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-04-09

கேட்டவர்

கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-18

பதில் அளித்தார்

கௌரவ அரவிந்த செனரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks