E   |   සි   |  

 திகதி: 2026-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1657/2026: கறுவா அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பிரதேச அலுவலகங்கள்: விபரம்

1657/2025

கௌரவ சானக மாதுகொட,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதேச கறுவா அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

           (ii)    மேற்படி உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iii) மேற்படி திணைக்களத்தினதும் பிரதேச அலுவலகங்களினதும் நிறுவனக் கட்டமைப்பு யாதென்பதையும்;

(iv) மேற்படி திணைக்களத்தைப் பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் நியதிச்சட்ட நிறுவனமாகத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(v) திணைக்களத்தின் வினைத்திறனுக்குத் தேவையான மனித வளங்கள் போதுமானதாக உள்ளனவா என்பதையும்;

(vi) இன்றேல், அதற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-23

கேட்டவர்

கௌரவ சானக மாதுகொட, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-23

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks