E   |   සි   |  

 திகதி: 2026-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1548/2026: பூணுகலை - வேவெல்தலாவை வீதி: புனரமைத்தல்

1548/2025
கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின், பூணுகலை தொடக்கம் வேவெல்தலாவை (வேவியதலாவை) வரையிலான வீதியின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள் என்பதையும்;
(ii) அப்பாதையானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடைபயணத்தில் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி வீதியின் பூணுகலை தொடக்கம் வேவெல்தலாவை வரையிலான பகுதியானது எந்த வருடத்திலிருந்து புனரமைக்கப்படாதுள்ளது என்பதையும்;
(iv) குறித்த வீதி புனரமைக்கப்படாமையானது வேவெல்தலாவை தோட்டத்தில் வசிப்பவர்களுக்கு தமது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் தடையாக இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) மேற்படி வீதியை புனரமைப்பதற்கு இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(vi) குறித்த வீதியை புனரமைப்பது தொடர்பில் உரிய பெருந்தோட்டக் கம்பனிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவும் இணக்கப்பாடு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-23

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks