பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1526/2025
கௌரவ துரைராசா ரவிகரன்,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பல கண்கவர் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம், சுற்றுலாத் துறையில் வளர்ச்சி குன்றிய மாவட்டமாக காணப்படுவதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட விசேட கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், வீதிகள், தங்குமிட வசதிகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் பார்வையாளர் மையங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி மாவட்டத்தின் சுற்றுலாத் துறையில் தனியார் துறையினரின் முதலீட்டை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(v) முல்லைத்தீவு மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளை சுற்றுலா வழிகாட்டிகளாக, சூழலியல் சுற்றுலா வசதிகளை ஏற்பாடு செய்பவர்களாக அல்லது விருந்தோம்பல் துறையின் தொழில்வாண்மை மிக்கவர்களாக பயிற்சியளித்து பணியமர்த்துவதற்கு ஏதேனும் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
(vi) முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் விசேட சுற்றுலா வலயங்களாக பிரகடனப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-23
கேட்டவர்
கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் ஆங்கில மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-07-23
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks