E   |   සි   |  

 திகதி: 2026-08-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1495/2026: Construction of Electric fences for Elephants in Batticaloa

1495/2025
கௌரவ சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள், மனித உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பதை அறிவாரா;
(ii) மேற்படி சேதங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iii) மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு வேலியின் மொத்த நீளம் யாது;
(iv) ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு வேலிகளை உடைத்துத் தரைமட்டமாக்கி குடியிருப்புகள் மற்றும் பயிர் நிலங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை அறிவாரா;
(v) அதனைத் தடுப்பதற்காக இவ்வருடத்தில் மேலதிக யானை தடுப்பு வேலிகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மாவட்டத்தில் புதிதாக 05 வட்டார வன அலுவலகங்களை தாபிப்பதற்குரிய சாத்தியக்கூறு உள்ளதா;
(ii) 14 உப வட்டார வன அலுவலகங்களைத் தாபிப்பதற்குரிய சாத்தியக்கூறு உள்ளதா;
(iii) அவற்றுக்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks