E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

1450/2026: அமய அடிப்படையில் கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்கள்: கிழக்கு மாகாணம்

1450/2025
கௌரவ சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக பணியாற்றும் 'கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்களின்' எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அம்மாகாணத்திற்கு மேற்படி பதவிக்குத் தேவைப்படும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) 2018 ஆம் ஆண்டில் நீர் வெறுப்பு நோயை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் 'நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு உதவியாளர்' பதவிக்கு அமய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுள், 2019 ஆம் ஆண்டில் 'கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்களாக' அமய அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவ்வகையில் அமய அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர் களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks