E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1378/2026: நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் கிராமிய வங்கிகளும்: கண்டி மாவட்டம்

1378/2025

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     கண்டி மாவட்டத்தில் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினதும் அச்சங்கங்களுக்குச் சொந்தமான கிராமிய வங்கிகளினதும் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

           (ii)    அவற்றுள் பல்வேறு நிதி மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சங்கங்கள் மற்றும் கிராமிய வங்கிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக மத்திய மாகாண ஆளுநரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அக்குழுவின் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் குழு வழங்கிய விதப்புரைகள் மற்றும் குறித்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks