E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1364/2026: சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்: வெற்றிடங்களும் பதவியுயர்வும்

1364/2025

கௌரவ எம். எஸ். உதுமாலெப்பை,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இலங்கையில் கடந்த 30 வருடங்களாக சுமார் 18,000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, இதுவரையில் அவர்களுக்கு எவ்விதமான பதவியுயர்வுகளும் வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் மேற்படி சேவைக்கான பதவியுயர்வுகள் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(iii) மேற்படி சேவையில் தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) உபாலி பன்னிலகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks