E   |   සි   |  

 திகதி: 2025-12-02   பதிலளிக்கப்பட்டவைகள் 

1363/2025: ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றும் அதிபர்கள்: இடமாற்றம்

1363/2025

கௌரவ துரைராசா ரவிகரன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     ஏதேனும் பாடசாலையொன்றில் 08 வருடங்களுக்கும் அதிகமான காலம் சேவையாற்றி வருகின்ற அதிபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாண ரீதியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) அதிபர் ஒருவர் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 08 வருடங்களை விட அதிகமான காலம் சேவையாற்றுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் யாவையென்பதையும்;

(iii) 2012 ஆம் ஆண்டு மிகை ஊழியர் அடிப்படையில் அதிபர்களாக உள்ளீர்க்கப் பட்டவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்களுடைய சேவைக்கான நிர்வாகக் கொடுப்பனவுகள் வழங்கப்படாததை அறிவாரா என்பதையும்;

(iv) அதற்கான தடைகள் யாவையென்பதையும்;

(v) பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு, மிகை ஊழியர் அடிப்படையில் சேவையாற்றும் அதிபர்கள் விண்ணப்பிப்பதற்குள்ள தடைகள் யாவையென்பதையும்;

(vi) 08 வருடங்களுக்கும் அதிகமாக ஒரே பாடசாலையில் மிகை ஊழியர் அடிப்படையில் சேவையாற்றும் அதிபர்களுக்கு, இடமாற்றம் வழங்குவதற்குள்ள இயலுமை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-12-02

கேட்டவர்

கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks