E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1284/ 2025 - கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1284/2025
      கௌரவ சட்டத்தரணி சரத் குமார,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட முடியுமா;
      (ii) அதற்காக அரசியல் உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுகிறது என்பதையும் அரசியல் உரித்தற்ற அரச உத்தியோகத்தர்கள் பதவி விலக வேண்டும் என்பதையும் அறிவாரா;
      (iii) உள்ளூராட்சி மன்றமொன்றில் நகரபிதா/தவிசாளர் பதவிக்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், அப்பதவியில் இருக்கும் காலப்பகுதியினுள் அவர் தேர்தலுக்கு முன்பு ஈடுபட்ட அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியுமா;
      (iv) அதற்குரியதான சட்ட நிலைமை யாது;
      (v) 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, மடுல்ல மற்றும் சியம்பலாண்டுவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தமது தவிசாளர் பதவியை வகித்த காலப் பகுதியினுள், தவிசாளர் பதவிக்குரிய சம்பளத்தையும், அரச உத்தியோகத்திற்கான சம்பளத்தையும் என இரண்டையும் பெற்றுக்கொண்டார்கள் என்பதை அறிவாரா;
      (vi) அதற்கான சட்ட உரித்து அவர்களுக்கு உள்ளதா;
      (vii) அவர்கள் இரண்டு சம்பளங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனில், அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
      (viii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
      என்பதை அவர் குறிப்பிடுவாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-09

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks