01

E   |   සි   |  

 திகதி: 2025-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1236/2025: வேப்பங்குளம் தொடக்கம் சிலாவத்துறை வரையான வீதி: விபரம்

1236/2025
கௌரவ கே. காதர் மஸ்தான்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் தொடக்கம் சிலாவத்துறை வரையான உள்ளக வீதி, 2010 ஆம் ஆண்டில் அப்போதைய மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் புனரமைக்கப்பட்டமையை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி வீதியின் தூரம் யாதென்பதையும்;
(iii) மேற்படி வீதி எந்தக் கிராமத்தினூடாகப் பயணிக்கின்றதென்பதையும்;
(iv) மேற்படி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் நிறைவு செய்யப்பட்ட திகதி வெவ்வேறாக யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி வீதியை புனரமைக்கும் பணிகளுக்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கம்பனியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரதியொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) உடன்படிக்கை எட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த கம்பனியின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;
(iii) மேற்படி வீதியை புனரமைப்பதற்காக கம்பனிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி வீதி புனரமைக்கப்படவில்லை என்பதையும் அதற்காக மோசடியான முறையில் பணம் பெறப்பட்டுள்ளதையும் அறிவாரா என்பதையும்;
(v) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-09

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-23

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks