E   |   සි   |  

 திகதி: 2026-02-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1184/2026: Statistics of Tamilcholai vidyalaya in Kilinochchi

1184/2025

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்ச்சோலை வித்தியாலயம் என்ற பெயரில்  பாடசாலையொன்று இயங்கி வந்ததை அறிவாரா என்பதையும்;

          (ii)     ஆமெனில், அந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

          (iii)    அந்தப் பாடசாலை மாணவர்கள் க.பொ.த (சாதாரண தர) பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இறுதியாக தோற்றிய ஆண்டுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) தற்போது மேற்படி பாடசாலையின் பெயர் யாதென்பதையும்;

(v) அந்தப் பாடசாலையின் பெயரை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் யாவர் என்பதையும்;

(vi) அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(vii) அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;

(viii) அந்தப் பாடசாலையின் பெயருக்காக அந்தப் பாடசாலையின் தாபகர் அல்லது பாடசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-02-17

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks