பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1066/2025
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வட மாகாணத்தில் தெங்குப் பயிர்ச்செய்கையினைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) பாதிக்கப்பட்ட தெங்குப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு இழப்பீடு/ நிதி உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதா;
(iii) அதன் பரவலுக்கான காலநிலைக் காரணங்கள் குறித்து சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் நடத்தப்பட்டனவா;
(iv) உயிரியல் கட்டுப்பாட்டு முறையாகிய ஒட்டுண்ணிக் குளவியைப் (Encarsia guadeloupe) பெற்றுக்கொண்ட பிராந்தியங்களின் எண்ணிக்கை யாவை;
(v) அத்தகைய தலையீட்டின் செயல்திறன் குறித்து;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அது ஏனைய மாவட்டங்களுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கு ஒரு தேசிய செயல்திட்டம் உள்ளதா;
(ii) உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் மாற்று சிகிச்சைகள் தொடர்பான விரிவாக்க நிகழ்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனவா;
(iii) தெங்குப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான பூச்சிக் கட்டுப்பாட்டிற்காக, அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் அவசரகால நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா;
(iv) புதிய கட்டுப்பாட்டு முறைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றனவா;
(v) இதை ஒரு விவசாய இடராக அறிவித்து, அதனைத் தீர்ப்பதற்கு அமைச்சுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-07
கேட்டவர்
கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks