E   |   සි   |  

 திகதி: 2025-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0925/2025: வெலிசர களஞ்சியசாலைக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள நிலப்பகுதி: ஒதுக்குதல்

925/2025
கௌரவ ஸ்டெபனி பிரனாந்து,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திற்குச் சொந்தமான வெளிசரை களஞ்சியசாலை கட்டிடத்தொகுதி அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி, வத்தளை நீதிமன்ற சட்டத்தரணிகளுக்கான அலுவலக கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி காணி ஒதுக்கப்பட்டுள்ள வழிமுறை யாது என்பதையும்;
(iii) வத்தளை சட்டத்தரணிகள் சங்கம் மேற்படி காணித் துண்டை, தற்போது வேறொரு நபருக்கு வாகனங்களை நிறுத்திவைப்பதற்காக வாடகைக்கு வழங்கியுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;
(v) மேற்படி காணித் துண்டு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-19

கேட்டவர்

கௌரவ ஸ்டெபனி பிரனாந்து, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-19

பதில் அளித்தார்

கௌரவ ஆர்.எம். ஜயவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks