E   |   සි   |  

 திகதி: 2025-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0924/2025: தனிப்பட்ட மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளுக்காக பொலிஸ் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கல்: நடவடிக்கைமுறை

924/2025
கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில் தனிப்பட்ட மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளின் பாதுகாப்புக்கு நாட்டின் பொலிஸ் அலுவலர்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான சட்ட ஏற்பாடு யாது என்பதையும்;
(iii) அது தொடர்பான நடவடிக்கைமுறை யாது என்பதையும்;
(iv) பொலிஸ் அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை வழங்குகையில் உயர்ந்தபட்ச வரையறை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேலே (i) இல் குறிப்பிட்டுள்ள சேவைகளை வழங்கும்போது கட்டணம் அறவிடும் வழிமுறை யாது என்பதையும்;
(vi) 2024 ஆம் ஆண்டு மற்றும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை அத்தகைய சேவைகளை வழங்கியதன் மூலமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் ஈட்டிய வருமானம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிட்டுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக கோரிக்கை விடுக்கும் தரப்பினர் தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படும் அளவுகோல்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி தரப்பினருக்கு யாதேனும் அச்சுறுத்தல் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கை கோரப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-20

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks