பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-07-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0919/2025: கொழும்பு - மட்டக்களப்பு இரவு தபால் புகையிரதம்: முதலாம் வகுப்பு உறங்கல் இருக்கை வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தல்

919/2025
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கொழும்பு – மட்டக்களப்பு இரவு தபால் புகையிரதத்தில் முதலாம் வகுப்பு உறங்கல் இருக்கை வசதி தற்போது கிடைக்கப்பெறுவதில்லை என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், இந்த வசதி கிடைக்கப்பெறாமைக்கான காரணங்களையும்;
(iii) இந்த வசதி மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்களையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கொழும்பு –மட்டக்களப்பு இரவு தபால் புகையிரதத்தில் உறங்கல் இருக்கை வசதியுள்ள முதலாம் வகுப்பு (குளிரூட்டப்படாத) பயணச்சீட்டு ஒன்றின் விலை ரூபா 5000/= ஆக உள்ள அதே நேரம் ஏனைய பயணப் பாதைகளில் உறங்கல் இருக்கை வசதியுள்ள முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) பயணச்சீட்டு ஒன்றின் விலை சுமார் ரூபா 2,800/= ஆகும் என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) இந்த விலை வித்தியாசத்திற்கான காரணத்தையும்;
(iii) இத்தகைய ஒரு வெளிப்படையான பாகுபாட்டிற்கான காரணங்களையும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-11

கேட்டவர்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-11

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) பிரசன்ன குணசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks