பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
915/2025
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டம் ஒவ்வொன்றினதும் மதிப்பீட்டுத்தொகை, கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி, இன்றளவில் செலவிட்டுள்ள பணத்தொகை, பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கை இன்றளவில் நீர் வசதி வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் கருத்திட்ட ஒப்பந்ததாரரின்/ஒப்பந்த நிறுவனத்தின் பெயர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி நீர்வழங்கல் கருத்திட்டங்களில் இதுவரையில் நீர்வசதி வழங்கப்படாத கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டங்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டம் ஒவ்வொன்றுக்குமான பெறுகைச் செயன்முறைக்குப் பொறுப்பாக இருந்த அலுவலர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(v) பெறுகைச் செயன்முறையில் ஊழல் அல்லது முறைகேடுகள் இடம்பெற்று இருப்பின், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-07-08
கேட்டவர்
கௌரவ ரீ.கே. ஜயசுந்தர, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-07-08
பதில் அளித்தார்
கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks