E   |   සි   |  

 திகதி: 2026-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0909/2026: புதிய கடவுச்சீட்டுகள்: விபரம்

909/2025

கௌரவ முஜிபுர் ரஹ்மான்,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     இன்றளவில் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதையும்;

           (ii)          கடவுச்சீட்டொன்றைத் தயாரிப்பதற்கு செலவாகும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

           (iii)   பழைய கடவுச்சீட்டில் மற்றும் புதிய கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) அப்பக்கங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(v) புதிய கடவுச்சீட்டின் பாதுகாப்பு வழிமுறையில் சிக்கல் நிலவுவதை அவர் அறிவாரா என்பதையும்;

(vi) புதிய கடவுச்சீட்டில் அநேகமான பிழைகள் காணப்படுவதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(vii) ஆமெனில், அவற்றை சரிசெய்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) E-Passportகளை அச்சிடுவதற்காக விலைமனு கோரி, தெரிவு செய்த நிறுவனத்திடம் சாதாரண கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு வழங்கியுள்ளமை பற்றி அவர் அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி நிறுவனத்திடமிருந்து விலைமனு கோராமல், சாதாரண கடவுச்சீட்டை அச்சிட வழங்கியமை, ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைக்கு முரணானதல்லவா என்பதையும்;

(iii) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-07

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-07

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks