E   |   සි   |  

 திகதி: 2025-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0865/2025: தேயிலை உற்பத்தியின்போது உற்பத்தியாகும் கழிவுத் தேயிலை: விபரம்

865/2025
கௌரவ லால் பிரேமநாத்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தேயிலை உற்பத்தியின் போது, இலங்கையிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுத் தேயிலை/மீள் தயாரிப்புத் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும்;
(ii) மேற்படி கழிவுத் தேயிலையானது, இலங்கை தேயிலைச் சபையின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் தொழிற்சாலையிலிருந்து அப்புறப்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது என்பதையும்;
(iii) இருப்பினும், மேற்படி அப்புறப்படுத்தும் செயன்முறையானது 100% சட்டப்பூர்வமாக இடம்பெறுவதில்லை என்பதையும்;
(iv) மேற்படி கழிவுத் தேயிலையானது, CTC தேயிலை உற்பத்தித் தொழிற்சாலை களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை எனப் பெயரிடப்பட்டு, கொழும்பில் இடம்பெறும் தேயிலை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்பதையும்;
(v) மேற்படி கழிவுத் தேயிலையானது சட்டவிரோத வழிகளூடாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும்;
(vi) மேற்படி நிலைமையானது தரமான தேயிலை உற்பத்தி செயற்பாட்டுக்கு தடையாக இருப்பதுடன் 'Ceylon Tea' யின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், கழிவுத் தேயிலை தொடர்பாக எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) கழிவுத் தேயிலை ஏற்றுமதியைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) இன்றேல், இலங்கை தேயிலைச் சபையின் மேற்பார்வையின் கீழ் கழிவுத் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-07-08

கேட்டவர்

கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-07-08

பதில் அளித்தார்

கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks