பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
849/2025
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தனியார் காணியொன்று துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற போது அக்காணியில் இருந்து குறிப்பிட்டளவு நிலப்பகுதியை பொதுக் காணியாகப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும்;
(ii) சம்பந்தப்பட்ட பிரதேச சபையானது குறித்த பொதுக் காணியை, குடியிருப்பாளர்களின் பொதுவான தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையும்;
(iii) எக்காரணம் கொண்டும் பொதுக் காணியைத் தனியார் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மினுவாங்கொடை பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுக் காணிகளின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஒவ்வொரு காணியின் பரப்பளவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மினுவாங்கொடை பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுக் காணிகள் தற்போது சில தனிநபர்களால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ௨ட்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி நபர்களின் பெயர்ப் பட்டியலைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) அவர்களுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) உள்ளூர் அரசியல்வாதியின் சகோதரர் ஒருவர் நில்பனாகொட கிராம அலுவலர் பிரிவிலுள்ள 'அம்ப செவன வத்த' காணிக்குரிய பொதுக் காணியில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காணி நிரப்புதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாரா என்பதையும்;
(vi) ஆமெனில், அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-07-08
கேட்டவர்
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-07-08
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks