பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
848/2025
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மினுவங்கொடை நகர சபைக்குச் சொந்தமான 'நவீன வர்த்தக கட்டிடத் தொகுதி' என்ற பெயரில் அழைக்கப்படும் வர்த்தக கட்டிடத் தொகுதியொன்று மினுவங்கொடை நகரில் உள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) அங்குள்ள விற்பனைக் கூடங்களின் (கடை அறைகள்) எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) அந்த விற்பனைக் கூடங்கள் ஒவ்வொன்றையும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள நபர்களின் பெயர், முகவரி மற்றும் அறவிடப்படும் மாதாந்த அல்லது வருடாந்த வாடகை வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கட்டிடத் தொகுதியில் உள்ள விற்பனைக் கூடங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நபர்களுக்கு, அந்த விற்பனைக் கூடங்களை வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கு, குத்தகைக்கு விடுவதற்கு அல்லது உரிமை மாற்றம் செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா என்பதையும்;
(ii) தற்போது இந்த விற்பனைக் கூடங்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள், மினுவாங்கொடை நகர சபையுடன் ஒப்பந்தங்களைச் செய்து, அந்த விற்பனைக் கூடங்களைப் பெற்றுக்கொண்ட அதே நபர்களா என்பதையும்;
(iii) இன்றேல், தற்போது அந்த விற்பனைக் கூடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களின் பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) அந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-18
கேட்டவர்
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.
அமைச்சு
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-18
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks