E   |   සි   |  

 திகதி: 2025-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0835/2025: பாரிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள்: ஒதுக்க எல்லைகள்

835/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையிலுள்ள பாரிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி நீர்த்தேக்கங்களின் ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நீர்த்தேக்கங்களின் மேற்படி எல்லைகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைகள் தொடர்பாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அநுராதபுரம் மாவட்டத்தின், நுவர வாவியின் ஒதுக்கப்பட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அந்நபர்களின் பெயர்ப்பட்டியலை சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அவர்கள் வதியும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-20

கேட்டவர்

கௌரவ சுசந்த குமார நவரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks