பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
823/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் இன்றளவில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இவர்களில் விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) அதற்கைமைவாக குறிப்பிட்ட எண்ணிக்கைகொண்ட மாணவர்களுக்கு விடுதி வசதிகள் கிடைக்காததை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) இன்றளவில், கொழும்புப் பல்லைக்கழகத்திற்குச் சொந்தமாக காணப்படுகின்ற விடுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் இருபாலார் எனும் வகைப்படுத்தலின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 800 மாணவிகளின் விடுதி வசதிகளைப் பூர்த்திசெய்த "முத்தையா" பெண்கள் விடுதி அமைந்திருந்த கொழும்பு 02 பிரதேசத்திலுள்ள காணி, 2020 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டதை அறிவாரா?
(ii) மேற்படி விடுதி அமைக்கப்பட்டிருந்த காணியின் தற்போதைய உரித்தை எந்த நிறுவனம் கொண்டுள்ளது என்பதையும்;
(iii) மேற்படி விடுதி உடைத்து அகற்றப்பட்டு 05 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அங்கு இதுவரையில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்த முழுக் காணி அல்லது அதன் ஒரு பகுதி மீண்டும் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-22
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-22
பதில் அளித்தார்
கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks