E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0796/2025: மணல் அகழ்விடங்கள் மற்றும் மணலுக்கான தேவைப்பாடுகள்: விபரம்

796/2025
கௌரவ ஈ.எம். பஸ்நாயக,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையின் பிரதான ஆறுகள், கிளை ஆறுகள், நீரோடைகள் மற்றும் கால்வாய்களை அண்டியதாகக் காணப்படும் மணல் அகழ்விடங்களின் எண்ணிக்கை மற்றும் இவற்றைச் சார்ந்து தொழில் புரிவோரின் எண்ணிக்கை ஆகியன வெவ்வேறாக யாது;
(ii) மேற்குறிப்பிட்ட மணல் அகழ்விடங்களில் சட்டரீதியான மணல் அகழ்விடங்களின் எண்ணிக்கை யாது;
(iii) சட்டவிரோதமான மணல் அகழ்விடங்களும் உள்ளதென அறிவாரா;
(iv) ஆமெனில், மேற்படி மணல் அகழ்விடங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் யாவை;
(v) மணல் அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் நிர்மாணப் பணிகளுக்கு வருடாந்தம் தேவைப்படும் மணலின் அளவு கணக்கிடப்பட்டுள்ளதா;
(ii) அத்தகைய அளவினை நிரம்பல் செய்வதற்கான இயலுமை காணப்படுகின்றதா;
(iii) இன்றேல், இதற்கான மாற்றுவழிகள் காணப்படுகின்றனவா;
(iv) மணலை வழங்குவதற்கான புதிய வழிமுறைகள் யாவை;
(v) மேற்படி புதிய மணல் அகழ்வு வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா;
(iv) இன்றேல், இதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ ஈ.எம். பஸ்நாயக, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks