E   |   සි   |  

 திகதி: 2025-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0792/2025: தற்போதைய வழித்தட அனுமதிகளில் புதிய பேருந்துகளை ஈடுபடுத்துதல்: நிலுவைத் தொகை அறவிடல்

792/2025
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கைக்கான வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உரிமம் பெற்ற பேருந்து உரிமையாளர்களுக்குச் சொந்தமான, சேவையில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமற்ற பேருந்துகளை விற்பனை செய்ததன் பின்னர், புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய பேருந்து இறக்குமதி செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியில், அப்பேருந்து உரிமையாளர்கள் வீதி அனுமதிப் பத்திரத்தை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்திருந்தனர் என்பதையும்;
(iii) பேருந்து இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியபோது, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது 'ஓட்டப் பதிவுக் குறிப்பு' வழங்குகையில் சேவையில் ஈடுபடுத்தப்படாத காலப்பகுதிக்கும் நிலுவைத் தொகையை அறவிடுகிறது என்பதையும்;
(iv) பேருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் பேருந்துகளை கொள்வனவு செய்ய முடியாமல் போனதால் புதிய பேருந்துகளை ஓட்டத்தில் ஈடுபடுத்த முடியாமல் போனது என்பதையும்;
(v) ஆகையால், பேருந்துகளுக்கான 'ஓட்டப் பதிவுக் குறிப்பினை' வழங்கும் போது ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாத காலப்பகுதிக்கு ஏற்புடையதாக நிலுவைத் தொகையை அறவிடுவது அநீதியானது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) அவ்வாறெனில், இது தொடர்பில் வழங்கப்படும் தீர்வுகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-18

கேட்டவர்

கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-18

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks