E   |   සි   |  

 திகதி: 2025-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0789/2025: திரு. வை.எம். ரத்னபாலவுக்கு மஹியங்கனை நகரில் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட அரச காணி: விபரம்

789/2025

கௌரவ சுதத் பலகல்ல,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     மஹியங்கனை நகரில் விவசாயப் பொருள் விற்பனை நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை வங்கியை அண்டிய காணியில் 2004 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டதென்பதையும்;

           (ii)    தற்போதைய சனாதிபதி கமத்தொழில் அமைச்சராக மேற்படி காணியை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு கையகப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் என்பதையும்;

(iii) அதன் பொருட்டு மஹியங்கனை கமநல சேவை செயற்குழுவினரும் விவசாயிகளும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள் என்பதையும்;

(iv) மேற்படி காணியை, மஹியங்கனை, 48ஆம் மைல்கல், அராவத்தயில் வசிக்கும் திரு. வை.எம். ரத்னபாலவுக்கு முன்னுரிமை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு காணி ஆணையாளர் நாயகத்தின் 4/10/75144 இன் கீழ் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(v) முன்னுரிமை அடிப்படையில் அரச காணிகள் வலுவான மற்றும் விசேட காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே அளிக்கப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி காணிகளை ஒப்படைப்பதற்கு 80 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை தெரிவு செய்தமைக்கான காரணம் யாது;

(ii) அரச காணிகளை பாராதீனப்படுத்தும்போது, அரசின் தேவைகளுக்கு போதுமான நிலம் உள்ளதா என்பதும் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் உடல் தகுதியும் கவனத்தில் கொள்ளப்படுவதோடு பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆளொருவருக்கு அரச காணிகள் வழங்கப்படுவதில்லை என்பதை அறிவாரா;

(iii) மேற்படி காணியை ஒப்படைக்கும் போது மேற்கண்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதா;

(iv) மேற்படி குத்தகை அங்கீகாரம் இரத்துச் செய்யப்படுமா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-05-22

கேட்டவர்

கௌரவ சுதத் பலகல்ல, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-22

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) சுசில் ரணசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks