பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
720/2025
கௌரவ டபிள்யூ.எச்.எம். தர்மசேன,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள கிராமங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அந்தக் கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மொனராகலை மாவட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமுதாய அடிப்படையிலான நீர்வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அவற்றில், தற்போது வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள சமுதாய அடிப்படையிலான நீர்வழங்கல் திட்டங்கள் யாவை என்பதையும்;
(v) மொனராகலை மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக சமுதாய அடிப்படையிலான நீர்வழங்கல் திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மொனராகலையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகமொன்று அமைக்கப்பட்டிருந்தபோதும், தற்போது அந்த அலுவலகம் அகற்றப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) இதன் காரணமாக மொனராகலைப் பிரதேச மக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து சேவைகளைப் பெறுவதற்கு பதுளை அல்லது கதிர்காமத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால், இவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், மொனராகலையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-19
கேட்டவர்
கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-19
பதில் அளித்தார்
கௌரவ ரீ. பீ. சரத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks