04

E   |   සි   |  

 திகதி: 2013-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2706/2013: மாத்தறை சாரிபுத்ர மகா வித்தியாலய மேலதிக ஆசிரியர்கள்: இடமாற்றம்

2706/ ’12

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     மாத்தறை பம்புரண சாரிபுத்ர மகா வித்தியாலயத்தில் மேலதிக ஆசிரியர்களைப் பற்றி மாத்தறை வலயக் கல்விக் காரியாலயத்தின் உத்தியோகத்தர்களால் 2012 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கணக்காய்வின் போது  நீண்ட சேவைகாலமுடைய மேலதிக ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டதென்பதையும்;

(ii) மேற்படி பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினால் வித்தியாலயத்தின் லொக் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இவ்வித்தியாலயத்தின் தற்போதைய அதிபருக்கு நெருக்கமான மேற்படி பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு்ள்ள ஆசிரியர்களை அங்கேயே வைத்துக்கொண்டு கற்பித்தல் நேரசூசியுடைய குறைந்த சேவைக்காலத்தை கொண்ட வேறு ஆசிரியர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பெரும் அநீதி நிகழ்ந்துள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பாடசாலையில் மேலதிக ஆசிரியர்களைப் பற்றி வலயக் கல்விக் காரியாலயத்தினால் நடாத்தப்பட்ட கணக்காய்வின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-21

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-04-08

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks