பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
714/2025
கௌரவ தனுஷ்க ரங்கனாத்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுத்துறை மாவட்டத்தில் அரசாங்க தமிழ் மொழிப் பாடசாலைகள் உள்ளனவா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அப்பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) அவற்றில் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) வரை கல்வி போதிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் க.பொ.த. (உ/த) பாடங்களை கற்கக்கூடிய பாடசாலைகள் யாவையென்பதையும்;
(ii) அவற்றில் கலை மற்றும் வர்த்தகப் பாடத் துறைகளை தமிழ் மொழிமூலம் கற்கக்கூடிய பாடசாலைகள் எத்தனை என்பதையும்;
(iii) கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் பாடத் துறைகளை தமிழ் மொழியில் கற்கக்கூடிய பாடசாலைகள் உள்ளனவா என்பதையும்;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) களுத்துறை மாவட்டத்தில் அனைத்து பாடத் துறைகளையும் தமிழ் மொழிமூலம் கற்கக்கூடிய அரசாங்க பாடசாலைகள் உள்ளனவா என்பதையும்;
(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) களுத்துறை மாவட்டத்தில் அத்தகைய ஒரு பாடசாலையையேனும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-06-05
கேட்டவர்
கௌரவ தனுஷ்க ரங்கனாத், பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-06-05
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks