E   |   සි   |  

 திகதி: 2026-08-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0684/2026: Area of archaeological lands owned by Department of Archaeological in Anuradhapura District

684/2025
கௌரவ ரோஹண பண்டார,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருளியல் முக்கியத்துவமிக்க இடங்கள் யாவையென்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டிலிருந்து இது வரை அந்த மாவட்டத்தில் அறிக்கையிடப் பட்டுள்ள தொல்பொருள் திருட்டு மற்றும் அழிப்புகள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மாவட்டத்துக்குள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள திணைக்கள ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) மாவட்டத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) நிலவும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks