பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
669/2025
கௌரவ அசித நிரோஷன எகொட விதான,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மிலேனியம் சிட்டி வீட்டுத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, ஒருவல உருக்கு கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளிலிருந்து, செலிங்கோ டிவலபர்ஸ் அன்ட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டு திட்ட அங்கீகாரத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்னிலைப்படுத்திய காணியின் அளவு யாது என்பதையும்;
(ii) அவ்வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு ஏற்புடையதாக அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் காணப்படுமாயின் அதனை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) வீட்டுத் தொகுதியின் பொது வசதிகளுக்கென ஒதுக்க வேண்டிய, திட்டத்தின்படி ஒதுக்கப்பட்டுள்ள மற்றும் நடைமுறையில் உண்மையாகவே ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு வெவ்வேறாக யாது என்பதையும்;
(v) நடைமுறையில் உண்மையாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகள், அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் காண்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vii) பொது வசதிகளுக்கென வீட்டுத் தொகுதிக்குப் புறம்பாக சதுப்பு நிலக் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(vii) அது சட்டரீதியானதா என்பதையும்;
(ix) இன்றேல், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள காணியின் அளவு யாது;
(ii) அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iii) அந்தக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-05-21
கேட்டவர்
கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-05-21
பதில் அளித்தார்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks