E   |   සි   |  

 திகதி: 2025-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0636/2025: பாலாவியிலிருந்து அறுவைக்காடு வரை சுண்ணாம்புக்கற்களை ஏற்றிச் செல்லல்: புகையிரதத் திணைக்களத்துடனான ஒப்பந்தம்

636/2025
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) புத்தளம், பாலாவியிலிருந்து அறுவக்காறு சுண்ணாம்புக்கல் ஆலைக்கு சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் செல்வதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத என்ஜின்கள், பெட்டிகள் மற்றும் துணை உறுப்புகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்குறிப்பிட்ட உபகரணங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;
(iii) 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மேற்படி உபகரணங்களை குத்தகை அடிப்படையில் வழங்கியதன் மூலம் இலங்கை புகையிரதத் திணைக்களம் ஈட்டிய வருமானம் ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி குத்தகை ஒப்பந்தத்தை சமகால தேவைப்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-06-18

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-18

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks