logo

E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0631/2025: சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல அரச பாடசாலைகள்: ஆசிரிய வெற்றிடங்கள்

631/2025

கௌரவ முஜிபுர் ரஹுமான்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலும் தரம் 6 முதல் தரம் 11 வரையிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

           (ii)     மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலும் தரம் 6 முதல் தரம் 11 வரையிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

(iii) கொழும்பு கல்வி வலயத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையிலும் தரம் 6 முதல் தரம் 11 வரையிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

(iv) மேற்படி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(v) குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவைப்படும் காலம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-21

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks