E   |   සි   |  

 திகதி: 2025-04-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0612/2025: தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியம்: நோக்கங்கள்

612/2025
கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தை தாபித்ததன் நோக்கங்கள் யாவை;
(ii) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேற்படி நிதியத்திற்கு அன்பளிப்பாக கிடைத்துள்ள தொகை யாது;
(iii) மேற்படி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் யாவை;
(iv) மேற்படி நிதியத்திற்கு அன்பளிப்பாக கிடைத்துள்ள நிதி, மேற்படி நிதியத்தின் நோக்கங்களுக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(v) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-25

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-05

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks