பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-04-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0605/2025: முன்பள்ளி நிர்வாகிகள்: ஆகக்குறைந்த கல்வித் தகைமை

605/2025
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் இன்றளவில் பதிவு செய்யப்பட்டுள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளிகள்) எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி முன்பள்ளிகளில் சேவையாற்றும் முன்பள்ளி நிர்வாகிகள் பூர்த்தி செய்ய வேண்டிய ஆகக் குறைந்த கல்வித் தகைமை யாதென்பதையும்;
(iii) இன்றளவில் சேவையில் ஈடுபட்டுள்ள முன்பள்ளி நிர்வாகிகளுள் மேற்படி ஆகக் குறைந்த கல்வித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள நிருவாகிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) சகல முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அல்லது அவ்வாறான வழிகாட்டல் பொறிமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முன்பள்ளி, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிலைகளுள் முன்பள்ளிக் கல்வியே மிகவும் தீர்மானகரமானதும், முக்கியமானதுமாகும் என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், முன்பள்ளி கல்வியை நேரடியாக கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதனை மேலும் பயனுறுதிமிக்க வகையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-25

கேட்டவர்

கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.

அமைச்சு

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-04

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நாமல் சுதர்சன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks