E   |   සි   |  

 திகதி: 2025-04-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0604/2025: மினுவாங்கொடை, பன்சில்கொடைப் பாலம்: நிறைவுசெய்யப்படாமை

604/2025
கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— போக்குவரத்து, ​நெடுஞ்சாலைள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கம்பஹா மாவட்டத்தின், மினுவாங்கொடை பன்சில்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள 09 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8000 பொதுமக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் பாலம் பழுதுபார்க்கப்படுவதற்காக 2021 ஆம் ஆண்டில் கழற்றி அகற்றப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) எனினும், நான்கு வருடங்களாக மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாமை மற்றும் அந்த வீதியினூடாக கம்பஹா வரையில் பயணித்த இரண்டு பேருந்துகளும் பயணிக்காமை காரணமாக மேற்படி பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு இலக்காகி உள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பாலத்திற்குப் பதிலாக புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) குறித்த மொத்த தொகையும் உரிய கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அந்தக் கணக்கின் பெயர் மற்றும் கணக்கு பேணப்படும் வங்கி யாதென்பதையும்;
(iv) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகளை இரண்டரை மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பாகவுள்ள அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு 2024.04.04 ஆம் திகதி நடைபெற்ற மினுவாங்கொட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(v) மேற்படி பாலத்தைத் திறந்துவைக்க எடுக்கும் காலம் யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-23

கேட்டவர்

கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-21

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks