பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
599/2025
கௌரவ (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொது மருத்துவரொருவருக்கும் விசேட மருத்துவ நிபுணரொருவருக்கும் அரசாங்கத்தினால் செலுத்தப்படும் மாதாந்த ஊதியம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) அரசாங்க சேவையில் இருக்கும் போது லீவு பெற்று அல்லது சேவையிலிருந்து விலகி இன்றளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பொது மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) 2020 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தாக்கம் செலுத்திய காரணிகள் யாவை என்பதையும்;
(v) இன்றளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) மருத்துவர்களின் ஊதியங்களை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(vii) மருத்துவர்கள் நாட்டை விட்டுச் செல்வதை குறைப்பதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-06-26
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-06
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ஹங்சக விஜேமுணி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks