பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
581/2025
கௌரவ லால் பிரேமநாத்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அரச மருத்துவமனைகளின் வகைப்படுத்தலின் பிரகாரம், ஒவ்வொரு வகையின் கீழ் வருகின்ற மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு வகையின் கீழும் மாத்தறை மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மாத்தறை மாவட்டத்திலுள்ள ஆரம்ப மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி நிலையங்களுக்கு உலக வங்கி கடன் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ 18 அவசர சிகிச்சைப் பிரிவுகள் (ETU) கொள்வனவு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வருடம் யாதென்பதையும்;
(iv) அப்போது நிரல் சுகாதார அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் யாரென்பதையும்;
(v) அப்பிரிவுகள் இதுவரை அவசர சிகிச்சைப் பிரிவுகளாக இயக்கப்படவில்லை எனின், அதற்கான தடை யாதென்பதையும்;
(vi) அப்பிரிவுகளை அவசர சிகிச்சைப் பிரிவுகளாக இயக்குவதற்கு மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-10
கேட்டவர்
கௌரவ லால் பிரேமநாத், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-10
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks