E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0580/2025: குருணாகல் - ஹபரணை புகையிரதப் பாதைக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள்: நட்டஈடு/ கருணைக் கொடுப்பனவு

580/2025
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) அப்போதைய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் இலங்கைப் புகையிரத திணைக்களத்தினால் குருணாகல் - தம்புள்ளை ஊடாக ஹபரன வரையில் புகையிரதப் பாதையொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்குரியதான அடிப்படைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;
(ii) அதற்கென கலேவெல மற்றும் தம்புள்ளை பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்களினதும், ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையின் மற்றும் பம்பாவ ரஜமஹா விகாரையின் காணிகள் மற்றும் சொத்துக்களின் இருப்பாட்சி/ உடைமை உரிய பிரதேச செயலாளர்களினால் சட்டரீதியாக கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) பிரதேச செயலாளர்களினால் இருப்பாட்சி பொறுப்பேற்கப்பட்ட மேற்படி காணிகள் மற்றும் சொத்துக்களின் இருப்பாட்சியை முன்னுரித்தாளர்களுக்கு மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சொத்துக்கள் கடந்த சுமார் 10 வருடங்களாக பராமரிக்கப்படாமையின் காரணமாக அவற்றுக்கு இடம்பெற்றுள்ள அழிவுகளுக்கான நட்டங்களுக்காகவும் காணிகள் அபிவிருத்தி செய்யப்படாமை காரணமாக வருமானங்களை இழந்தமைக்காகவும் நட்டஈட்டுத் தொகை/ கருணைக் கொடுப்பனவு வழங்கப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், அது தொடர்பில் பின்பற்றப்படும் முறைமை யாது என்பதையும்;
(iv) மேற்படி நட்டஈடு/ கருணைக் கொடுப்பனவு வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;
(v) இன்றேல், அவ்வாறான ஏதேனும் கொடுப்பனவு வழங்கப்படுவது இடம்பெறாதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-21

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks