logo

E   |   සි   |  

 திகதி: 2025-05-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0578/2025: பாலங்களை அமைத்தல்: மட்டக்களப்பு மாவட்டம்

578/2025
கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவி காரணமாக அம்மாவட்டம் எழுவான்கரை மற்றும் படுவான்கரை என இரண்டு நிலப்பரப்புக்களாக பிரிந்துள்ளமையால் அங்கு வாழும் மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) அம்மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பாலங்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பாலங்கள் இன்மையால் அம்மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் யாவை என்பதையும்;
(ii) அச்சிரமங்களைப் போக்குவதற்கு அண்ணளவாக எத்தனை பாலங்களை நிர்மாணிக்க வேண்டுமென்பதையும்;
(iii) மேற்படி பாலங்கள் எப்பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட வேண்டுமென்பதையும்;
(iv) நிர்மாணிக்கப்படவுள்ள பாலங்களுள், 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் ஆகக் குறைந்தது இரண்டு பாலங்களையேனும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(v) அப்பாலங்களை நிர்மாணிப்பதால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதாரா ரீதியாக கிடைக்கப் பெறும் அனுகூலங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-05-20

கேட்டவர்

கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks