E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0573/2025: யால தேசிய வனப்பூங்கா: ஊழியர் மற்றும் வசதிகள் பற்றாக்குறை

573/2025
கௌரவ அதுல வெலதகொட,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) யால தேசிய வனப்பூங்காவின் ஊழியர் பற்றாக்குறை, ஊழியர் வீடுகள், சுற்றுலா பங்களாக்கள், கழிவறை வசதிகள், வீதிக் கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி வனப்பூங்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட சுற்றுலா ஜீப் வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) பதிவு செய்யப்பட்டபோதிலும் இன்றளவில் சுற்றுலா வசதிகள் வழங்கப்படாத ஜீப் வண்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அந்த ஜீப் வண்டிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(v) அந்த ஜீப் வண்டிகளுக்கு பதிலாக மாற்றீடு ஜீப் வண்டிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(vi) அதிக சுற்றுலா ஈர்ப்பையும் கவனத்தையும் வென்றுள்ள, இலங்கைக்கு தினசரி அதிக வருமானத்தை ஈட்டித் தரும் யால தேசிய வனப்பூங்காவிலுள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக மேற்கொள்ளப்படும் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ அதுல வெலதகொட, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks