பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
572/2025
கௌரவ அதுல வெலதகொட,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம, லுணுகம்வெஹர, சூரியவெவ மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளை உடனடுத்து அமைந்துள்ள யானைகளை முகாமை செய்வதற்கான ஒதுக்குப் பிரதேசத்தில் சட்ட விரோதமான நிர்மாணங்களும் பயிர்ச்செய்கைகளும் உள்ளன என்பதையும்;
(ii) அது காட்டு யானைகளின் இருப்புக்கு பெருந்தடையாக உள்ளது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி சட்ட விரோதமான நிர்மாணங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி சட்ட விரோத நிர்மாணங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) மேற்படி யானைகளை முகாமை செய்வதற்கான ஒதுக்குப் பிரதேசத்திற்கு வெளியே காணப்படுகின்ற குடியிருப்புகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் காட்டு யானைகள் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் உயிர் மற்றும் பயிர்ச் சேதங்கள் உச்சம் கண்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், அக்காரணத்தால் இதுவரை இறந்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் காட்டு யானைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-10
கேட்டவர்
கௌரவ அதுல வெலதகொட, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-10
பதில் அளித்தார்
கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks