logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2025-04-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0541/2025: தேசிய புற்றுநோய் நிறுவனம்: அத்தியாவசிய மருந்துகள்

541/2025
கௌரவ ஹர்ஷன ராஜகருணா,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் Anastrazole என்ற மருந்து உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இல்லை என்பதையும்;
(ii) இதன் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாளாந்தம் இந்நிறுவனத்திற்கு வரும் நோயாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதோடு, அவர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) அவ்வாறாயின், அந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கம்பஹா மாவட்டத்தின் மல்வதுஹிரிபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் இற்றைவரை பகல் வேளையில் மாத்திரமன்றி இரவு வேளையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பதிலாளர்கள் இன்றி மருத்துவப் பணியாட்டொகுதியினர் இடமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக அந்தச் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பதையும்;
(ii) அதன் காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு இலக்காகி உள்ளனர் என்பதையும்
அவர் அறிவாரா?
(ஈ) இப்பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-10

கேட்டவர்

கௌரவ ஹர்ஷன ராஜகருணா, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-04-10

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks