logo

பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0519/2025: 31.12.2015இற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள்: ஓய்வூதிய முரண்பாடு

519/2025

கௌரவ ஜே.சீ. அலவத்துவல,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     2015.12.31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கும் 2015.12.31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதை அறிவாரா  என்பதையும்;

(ii) மேற்படி ஓய்வூதிய முரண்பாட்டை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(iii) இன்றளவில் பணியாற்றுகின்ற அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூ.17,800/= ஆகவும், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ரூ. 9,025/= ஆகவும் காணப்படுவதால் இவற்றுக்கிடையில் ரூ.8,775/= முரண்பாடு காணப்படுவதை அறிவாரா என்பதையும்;

(iv) மேற்படி முரண்பாட்டை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-04-22

கேட்டவர்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-05-20

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks